என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய பிரதேச தேர்தல்"
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் தீவிர களப்பணியாற்றி வருகிறது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நேற்று முன்தினம் 155 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #MadhyaPradeshElections #Congress #CongressCandidatesList
இந்தூர்:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிவராஜ்சிங் சவுகான் முதல் மந்திரியாக இருக்கிறார்.
இந்த முறையாவது மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. அதே நேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா இருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பா. ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கிறார்கள்.
மொரினாவில் நடைபெறும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி பேசுகிறார். பின்னர் ஜபல்பூர் சென்று நர்மதா நதி கரையில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்கிறார். அவர் சாலையில் ஊர்வலமாக சென்று கட்சி தொண்டர்களையும், மக்களையும் சந்திக்கிறார்.
கடந்த 20 நாட்களில் ராகுல் காந்தி 3-வது முறையாக மத்திய பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இதே போல பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், மத்திய பிரதேசத்தில் இன்று ஒரு நாள் பிரசாரம் செய்கிறார். இந்தூரில் உள்ள மால்வாட் நிமாட் பகுதியில் அவர் பேசுகிறார். கிருஷ்ணாபுர பகுதியில் பேரணியை தொடங்கி வைத்து சிறிது தூரம் நடந்து செல்கிறார். அமித்ஷாவுடன் மாநில முதல் மந்திரி சவுகானும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதேபோல பிரதமர் நரேந்திரமோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். #Congress #BJP #RahulGandhi #AmitShah #MadhyaPradeshelection
புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலத்துக்கு இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடை பெறுகிறது. இந்த முறை எப்படியாவது இந்த மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச தேர்தலை சந்திக்க, 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். மாநில காங்கிரஸ் செயல் தலைவர்கள் ராம்நிவாஸ் ராவத், பாலாபட்சன், காங்கிரஸ் எம்.பி.க்கள் காந்திலால் பூரியா, விவேக்தன்கா, ராஜ்மணி பட்டேல் உள்பட 32 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
நடைபெற இருக்கும் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் ஓட்டு போட்டதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பயன் படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுடன் ஒப்புகை சீட்டு பெறும் கருவிகளும் பொருத்தப்படுகிறது. இவை பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 10 சதவீத வாக்குச் சாவடிகளில் உள்ள எந்திரங்களில் இந்த ஆய்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று ஏற்றுக் கொண்டது. இதன் மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது.
இதனால் இந்த 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகிறது. 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அந்த கட்சி பா.ஜனதாவிடம் தோற்றது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பின் பற்றியது போல அவர் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு செல்கிறார். ஓம் சுரேஷ்ரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அவர் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அதிரடியான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக வீசும் அலையை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி ராகுல் காந்தி அவர்களிடம் விளக்கினார்.
ராகுல் காந்தியின் பிரசாரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்